Friday, March 31, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -7

பணம் படுத்தும் பாடு

                   ஊர்ப்பொது அரங்கில் மணிமன்றத்தின் முதல் வெளியீடாக             “ தாய்ப்பாசம் ” நாடகம் அரங்கேறிய பின்னர். அப்பகுதியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதுவரை அப்பகுதி மக்கள் பார்த்திராத சமூக அமெர்ச்சூர் நாடகத்தின் புதிய வடிவத்தை விரும்பிய பலர்  அடுத்த ஆண்டு காமன் பண்டிகையில் எங்கள் நாடகத்தை நடத்த வேண்டும் என வெளிப்படையாக விரும்பினர்.   ஊர்க்கமிட்டியில் சில   டான்ஸ், பபூன் காமிக்  விரும்பிகளும்,விடிய விடிய புராண நாடகத்தைப் பார்த்துப் பழகிய  பழமை விரும்பிகளும்  எங்கள் நாடகத்தை நடத்த அங்கீகரிக்க வில்லை. 

                இதனால் சலிப்படைந்த பல இளைஞர்கள்  மணி மன்றத்தில் புதிதாக வந்து சேரத் தொடங்கினர்.  ஊர்க் காமன் பண்டிகை முடிந்த அடுத்த  மாதத்தில் மன்றம் சார்பாக ஒரு புதிய நாடகத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  

முன்பைவிடச் சிறப்பாக ஊரார் வியக்கும் வண்ணம் ஒரு மூன்று மணிநேரம் நடக்கிறார்போல நாடகத்தைப் போட வேண்டும் என்று நண்பர்கள் என்னை உசுப்பேற்றிவிட்டனர்.  இப்போதும் பெண்பாத்திரம் இல்லாத நாடகம்தான் என்றதும்  
“பருப்பு இல்லாத சாம்பாரா?“  என எகிறிக்குதித்தனர் இரண்டு உறுப்பினர்கள்.
பெண் உறுப்பினர்கள் இல்லாத மன்றத்தில், சம்பளத்திற்கு ஒரு நடிகையை அழைத்து நடிக்க வைப்பதில்  பணம், பெற்றோர் எதிர்ப்பு என்பவற்றை எதிர் கொள்ள வேண்டியிருக்குமே  என்று யோசித்தபோது,  எங்கள் மன்றத்தில் புதிதாகச் சேர்ந்த ஆறுமுகம் என்ற உறுப்பினர் தான் பெண் வேடத்தில் நடிப்பதாக முன்வந்தான்.   குரல்மாற்றிப் பேசும் திறமையும் அவனிடம் இருந்ததால் பெண்பாத்திரத்தை வைத்து கதை எழுத முடிவு செய்தேன்.  

                 இம்முறை மேடையில் நடிகர்கள் அறிமுகத்திற்குப் பதில்   சிலைடு போடுவது என்ற புதுமையைப் புகுத்த நினைத்தேன்.
 ஒப்பனை செய்யும் சுகி அவர்களிடம் சிலைடு தயாரிப்புப் பொறுப்பை ஒப்படைக்க முடிவாயிற்று. ஆர்க்லைட் வின்செண்ட் செல்வின் ஸ்மித் அவர்கள் சிலைடு போடுவதற்கான சிறப்பான கருவியை அமைத்துத் தரவும் ஒப்புதல் தந்தார். 

                      இசைக்குழு. திரை, ஒப்பனை, சிலைடு, மேடை, பந்தல் எல்லாவற்றுக்கும் பணத்துக்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு பல உறுப்பினர்கள் மௌனியாகிப்போனார்கள்.  கடந்த ஆண்டு ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு, வேண்டியவர்களிடம் பெற்ற நன்கொடையோடு வெறும் 96 ரூபாய்தான் வரவு செலவாகியிருந்தது. இந்த ஆண்டு புதிய உறுப்பினர் பங்களிப்பை தலா 10 ரூபாயாக உயர்த்தவேண்டும் என்றபோது சிலர் மனமில்லாமல்( பணமில்லாமலதான் ) ஒத்துக் கொண்டனர் .அதில் பெருவழித்துறையில் மின்தொழில் நுட்பராகப் பணியாற்றிய சுப்பிரமணியன், நாராயணன் ஆகியோர்  பற்றாக்குறை ஏற்பட்டால் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக முன்வந்தனர்.  

             என்னதான் திறமை, வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு செயலின் வெற்றி பணபலத்தில்தானே இருக்கிறது. அதனால்  அதையே மையக் கருவாக்கி     “ பணம் படுத்தும் பாடு” என்ற பெயரில் நாடக உரையாடல்களை எழுதத் தொடங்கினேன்.   

                     பள்ளி இறுதித்தேர்வில் வெற்றி பெற்று, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த நேரம் அது. இரவு  வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு அரிகேன் விளக்கைத் திண்ணையில் வைத்துக் கொண்டு நாடக உரையாடலை வளர்த்தேன்.  
“என்னடி ராத்திரி பன்னெண்டு மணிவரைக்கும் ஒக்காந்து எழுதுறான் ஓம்புள்ளே” ன்னு அப்பாவின் அதட்டலுக்கு “ காலேஜ் பாடம் நெறைய இருக்கும் போல” ங்கிற அம்மாவின் பதில்களும் படிக்கத்தெரியாத அப்பாவின் நிலையும்  எனது நாடகப் படைப்புக்கு வசதியாவே அமைஞ்சது.

                        அந்த ஆண்டு  காமன் பண்டிகையில்  திண்டுக்கல் சாமி குழுவினரின்  “முனிவர் சபதம்” ங்கிற நாடகம் ( அரிச்சந்திர மயான காண்டம் தான்)  நடந்துச்சு. அதுல  நடனக் காரப்பெண்ணோட குத்தாட்டமும், பபூன் காமிக்ங்கிற பேர்ல பபூனோட குதர்க்கப் பேச்சு பாதியாகவும்  மகன் லோகிதாசனை இழந்த சந்திரமதியோட ஒப்பாரி மீதியாகவும் விடியவிடிய நடந்துச்சு.

               அந்த நாடகத்தை விட சிறப்பா அமையணுமுன்ன நம்ம நாடகத்துலேயும் ஒரு பொண்ணோட டான்சு  இடையிடையே இருக்கணமுன்னு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆசைப்பட்டாங்க.
அந்த செலவை அந்தப் பகுதியில தையல்கடை வச்சி நடத்திக்கிட்டிருந்த ஜனாப் ஜானிபாய் ஏத்தக்கிறேன்னு சொன்னாரு. சரி அதுக்காக தெருக்கூத்துல டான்சாடுற பொண்ணைக் கூப்புட முடியுமா? ன்னு மன்றத்தோட விதிமுறையைச் சுட்டிக்காட்டித் தவிர்க்க நெனைச்சேன்.


        அந்த சமயத்துல ஆபத் பாந்தகனா வந்தார்  அய்யனார்புரம் அமெச்சூர்ல நடிச்சுக்கிட்டிருந்த மீனாட்சி சுந்தரம். அவரோட தங்கையை நடனமாட ஏற்பாடு செய்துதர ஒத்துக்கிட்டாரு.

       யாரு அந்த நடனப் பெண் தெரியுமா?  திரைப்படத் துறையில அந்தக் காலத்துல அதிக சம்பளம் வாங்கி கதாநாயகனா பேர்பெற்ற புதுகையின் புகழ்பெற்ற பி.யு.சின்னப்பா அவர்களின் தங்கை மகள் நடனமணி நாகலெட்சுமிதான்

                  அப்பறமென்ன  அந்தாண்டு நாடகம்.   மனிதகுலத்தை ஆட்டுவிக்கும் பணத்தின் திருவிளையாடல் பற்றிய கதை. நகைச்சுவையான உரையாடல்கள். பெண்பாத்திரம் பங்கேற்ற ( ஆண்தான் ) காட்சிகள். புதுமையான சிலைடு அறிமுகம். இவற்றோடு புகழ் பெற்ற நடன மாது நாகலெட்சுமியின் நடனம் இவற்றோடு  வெற்றிநடை போட்டதைச் சொல்லவும் வேண்டுமோ?

                                                                        -- இன்னும் தொடரும்.



Wednesday, March 29, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள் - தொடர்-6


  வான்கோழி  மயிலாக மாறியபோது...


           தலைப்பேறு தாய்க்குக் கடினமான ஒன்றாக இருந்தாலும், பேறு முடிந்து வெளிவந்த மகவைக் கண்டதும் அத்தாய் எத்தகைய மகிழ்வினை அடைவாளோ அதைப்போல பலபடித் தடைகளைத் தாண்டி ஒரு காதணி விழாப் பந்தலில்  அரங்கேறிய “ தாய்ப்பாசம்” நாடகம்  தந்த  மகிழ்வை நானும் எனது கலைவாணர் மன்ற நண்பர்களும் அடைந்தோம்.

            மறுநாள் முதல் பார்த்தவர்கள் அளித்த பாராட்டுகளும். புகழுரைகளும் என்னைத் தொடர்ந்து  மேடைநாடகப் படிகளேறிப் பயணிக்கத் தூண்டியது.ஆனாலும் ஒரு  தேநீர் கடைக்கார பெரிய மனிதர்,  தன் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம்  “ மயிலப் பாத்து வான்கோழி ஆட நெனச்சா முடியுமாய்யா?” எனக் கேலியாகக் கேட்டுச் சிரித்த காட்சியைத்  தற்செயலாக நான்  பார்க்க நேர்ந்தது. அவர் விடிய விடிய நடந்த தெருக்கூத்துகளின் விரசங்களை மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்லியிருந்தாலும் என்னால் என்னவோ அந்தக் கூற்றை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியவில்லை.

                   மயிலாக ஆடிக்காட்ட வேண்டும் என்று என்னுள் கிளர்ந்த
அவரின் விமர்சனம்தான்  என்னை மேலும்  மேடை நாடக ஈடுபாட்டில் தீவிரப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

                   அடுத்த ஆண்டு  இன்னும் சிறப்பாக ஒரு பொது மேடையில் நாடகத்தை நடத்த வேண்டும் என்று அடுத்த வாரமே மன்றம்  கூடிமுடிவெடுததது. எங்களைப் போல  சமூக எண்ணங் கொண்ட சில இளைஞர்கள் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.   மன்றத்தின் உறுப்பினர்கள் அதிகமானபோதும் அதில் ஒரு புதிய பிரச்சனை உருவாகவும் செய்தது. 

                  “கலைவாணர் என்ற  அடைமொழிக்குரிய என்.எஸ்.கிருட்டிணன் ஒரு பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் . அவர் பெயரில் மன்றம் இயங்கினால்  ஒரு கட்சிசார்ந்த அமைப்பாக ஊராரிடையே கருத்து மோதல்கள் உருவாகும். எனவே மன்றத்திற்கு வேறு ஒரு பொதுவான பெயரை வைக்க வேண்டும்” என்று  புதிதாகச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் கருத்தினைச் சொன்னார். வந்தவுடனேயே  தனிக்கட்சியா என நான் நினைத்தாலும்  இணைந்த இளைஞர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாளாதிருந்தேன்.

                   சனநாயக வழியில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு, இறுதியாக  சமுதாயத்திற்கு ஒலி எழுப்பும் “மணி”  யை அடிப்படையாகக் கொண்ட “ மணிமன்றம்” என்று கலைவாணர் மன்றப் பெயர் மாற்றப்பட்டது. அதன் நிருவாகியாக பொன்.கருப்பையா செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

 அரசியல் சார்பற்று. சாதி, மத.பேதமற்று மன்றத்தின் செயல் முறைகள் இருத்தல் வேண்டும். சமூக விழிப்புணர்வுக் கருத்துகளை, சமுதாய மேம்பாட்டு  முற்போக்கு எண்ணங்களை நாடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்குவது. ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்து ஒரு நாடகம் நடத்துவது. செலவினங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வது, பற்றாக்குறைக்கு நன்கொடையாளர்களை நாடுவது.
 உறுப்பினர் ஆண்டு சந்தா  எட்டணா. தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்களை ஆண்டு தோறும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுப்பது. மாதந்தோறும் 5ஆம் தேதி மன்றக் கூட்டம்  நடத்துவது. கூட்டத்தில் அவ்வக்காலத்து நடப்புகள் பற்றி விவாதிப்பது. தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வராதவர்களை மன்றத்திலிருந்து நீக்குவது. என்றெல்லாம் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 

                  புதிதாகத் தொடங்கப்பட்ட “ மணிமன்றத்” தின் முதல் தலைவராக திரு அ.சுப்பிரமணியன்  தலைமையில் கூடிய முதல் கூட்டத்திலேயே அடுத்த ஆண்டு (1964) மணிமன்றத்தின் முதல்  மேடை நாடகத்தை பொது மேடையில் அரங்கேற்றுவது என முடிவானது.
 அடுத்த நாடகத்திற்கான  கதையினை எழுதி, உரையாடல் எழுதத் தொடங்கிய  வேளையில் எனது பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் எனக்கு எதிராக அமைந்து விட்டது. 

           “ கூத்தாடத் தொடங்கிப் படிப்பைக் கோட்டை விட்டான்டி ஒன் புள்ள” ன்னு அப்பா அம்மாவைத்திட்ட அடுத்த செப்டெம்பர் தேர்வுக்குப் படிக்க முனைந்ததில்   எனது புதிய நாடகம்  குறைப்பிரசவமாகவே உருப்பெறாமல் போயிற்று.

             “நீ பரிச்சை எழுது, எழுதாமப்போ, பாசாகு பாசாகமப் போ எங்களுக்கு மன்றத்த ஆரம்பிச்ச முத  வருசம்  நாடகத்தை நடத்தியே தீரணும்“ ன்னு  மன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் குரலெழுப்ப  பெத்தவங்களையும் நோகடிக்காம, மன்ற உறுப்பினர்கள் எண்ணத்தையும் பாழடிக்காம       காதணிப் பந்தல்ல போட்ட                               “ தாய்ப்பாசம்” நாடகத்திலேயேக் கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து, ரெண்டு மணி நேரம் நடத்துற மாதிரி, மன்றத் தலைவர்கிட்டே கொடுத்தேன். நா நேரடியா ஈடபடாம   டைரக்சன் கா.மாரிமுத்து ன்னு துண்டறிக்கையில போடச்சொல்லிட்டு மறைமுகமா அந்த நாடகத்தை இயக்குனேன். 


                1964 மே மாதம் 28 ஆம் தேதி நாடகத்தை நடத்த முடிவு செஞ்சு  முறையான  இசைக்குழு, நடராசபிள்ளை சீன், ராமகிருட்டிணன் ஒப்பனை, அழகப்பன் மேடை அமைப்பு என எல்லா ஏற்பாடுகளும்  முடிஞ்சு இறுதி ஒத்திகை நடக்க இருந்த 27.05.1964 அன்று பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் காலமானார். அதனால்  நாடகம் 07.06.1964 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து நடத்தப்பட்டது.

                  மணிமன்றத்தின் முதல் நாடக அரங்கேற்றச் செய்திகளுக்கே ஆறு தொடர்களாகிப் போச்சே. இவரோட 72 நாடகச் செய்திகளையும்  “ கன்னித்தீவு” மாதிரி எத்தனை வாரங்களுக்குப் போட்டு இழுக்கப்போறாரோ? ன்னு மலைக்க வேண்டாம்  வலைத்தள நட்புகளே.

            எனது எல்லா நாடக அனுபவங்களையும் கொட்டி  உங்களை அலுப்படையச் செய்யப்போவதில்லை.. அவற்றுள்  குறிப்பிடத்தக்க                       ( நகைச்சுவை, எதிர்பாராமல் நடந்த ) செய்திகள்  மட்டுமே இனிவரும் தொடர்களில்...

                                                                --- தொடர்ந்து சந்திப்போம்




Friday, March 24, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -5

 கலகலப்பில் தீர்ந்த கலக்கம் 

       “ தாய்ப்பாசம்” மேடை  நாடகத்தை ஆரம்பிக்கப் போற நேரத்துல நாடகத்துக்கு இசை வாசிக்க ஒத்துக்கிட்டிருந்த ( வெறும் புல்புல்தாராதான் )  என் சித்தப்பா ஆறுமுகம் அவர் வேலைபார்க்கிற மருத்துவமனையிலிருந்து வந்த அவசர அழைப்பால் மருத்துவமனைக்குப்  போயிட்டாருன்னு கடம் வாசிக்கிற காளிமுத்து வந்து சொன்னதும் அப்படியே ஆடித்தான் போயிட்டேன்.

          மணியோ ராத்திரி எட்டாச்சு . ஒரு மணி நேர  சின்ன நாடகம்தான். நாடகம் முடிஞ்சுதான் சாப்பாட்டுப் பந்தின்னு பசியோட காத்துக்கிட்டிருக்க  ரசிகர்கள் ஒரு பக்கம். ( காதுகுத்துக்கு வந்த உள்ளுர் வெளியூர் சொந்தக்காரங்கதான் )   பண்ணுன பாடம் மறக்குறதுக்குள்ளே மேடையேறிடணுமுன்னு தவிப்போட இருக்க  கன்னிமேடை நடிகர்கள் மறுபக்கம் .   இந்த நேரத்துலயா  இப்படி ஒரு சோதனை?

                மியூசிக் இல்லாம ஆரம்பிச்சா சப்புன்னு போயிடும் நாடகம். வாசிக்கிற சித்தப்பு வர்றவரைக்கும் காத்திருக்கவும் முடியாது. அந்த  நெலையில நானே இசைக் கலைஞனா அவதாரம் எடுக்கவும் முடிவு செஞ்சேன். 

               பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, வாசவி தட்டச்சு நிலையத்துல டைப்ரைட்டிங் கத்துக்கிட்ட எனக்கு, எங்க சித்தப்பாவோட புல்புல்தாராவை அப்பப்ப தட்டித் தடவிப்பாத்த  சில்லறை அனுபவம் கொஞ்சம் இருந்துச்சு. அந்தத்  தைரியத்துல  இப்பக் களத்துல இறங்கத் துணிஞ்சு சைடு சீன் ( தொங்கவிடப்பட்ட சேலைதான்) மறைவுல புல்புல்தாராவை எடுத்து முன்னால வச்சுக்கிட்டு ஒக்காந்தேன். கடத்துக்கு வச்சிருந்த பிலிப்ஸ் மைக்கை என் பக்கம் திருப்பி வச்சுக்கிட்டு கம்பிகளுக்குச் சுதி சேத்துக்கிட்டிருந்தேன்.
அந்த நேரம் பாத்து தேவைகார ரெங்கன் மாமா 

 “ மாப்ளே  எங்க இருக்கே?”ன்னு  கேட்டுக்கிட்டே மேடைப் பக்கம் அவசரமா ஓடியாந்தாரு.
 என்னடா இந்த நாடகத்துக்கு வந்த சோதனை?ன்னு நொந்த மனசோட 
“ இந்தா ஆரம்பிச்சாச்சு மாமா?” ன்னு ஒதறலோட மறைவை விட்டு வெளியே வந்தேன்.

 “ செத்த பொறுங்க மாப்ளே . எங்க ஆபீஸ் இன்ஸ்பெக்டர் (பி.டபிள்யு.ஐ) வந்திருக்காரு. அவரைத் தலைமை தாங்கச் சொல்லி ஆரம்பிக்கலாம்” ன்னாரு. அவரும் எங்கப்பாவும் இரயில்வே தட ஆய்வுப் பிரிவுல வேலை பாக்கறதால ஒரு பேச்சுக்கு இந்த நாடகத்தைப் பத்தி சொல்லியிருப்பாங்க போல இருக்கு. அவரு குடியிருக்கிற குவாட்டர்சு பக்கத்துலதான்.. 

அவருக்குப் பொழுது போகலையா இல்ல எங்களுக்குப் பொழுது சரியில்லையான்னு தெரியலே  வந்திட்டாரு.

             சரி தேவைகாரர் விருப்பமுன்னு வந்தவரை அழைக்க அவரோட போனா, அங்கே பதினெட்டுப்பட்டி நாட்டு அம்பலம் திருமலை, ஊர்த் தலைவர் மாயாண்டி, மளிகை அப்பாஸ் ராவுத்தர், இரயில்வே நிலைய ஸ்டால் முதலாளி இராமசாமி ன்னு எதிர்பார்க்காத பெரிய ஆளுங்கல்லாம்   உட்கார்ந்து இருக்காங்க. எனக்கு  உள்ளாடையெல்லாம் வேர்த்துப் போச்சு. இவங்க மத்தியில பசங்க நல்லா நடிக்கணுமேன்னு உள்மனசு ஓலமிட ஆரம்பிச்சுடுச்சு.

 “வாங்க வந்து ஆரம்பிச்சு வச்சுட்டு வந்துடலாம்ன்னு” பொதுவுல ரெங்கன் மாமா சொன்னதும் அதுக்காகவே காத்திருந்த மாதிரி  அஞ்சுபேரும் மேடைக்கு வந்துட்டாங்க. அவங்களை வரவேற்று அறிமுகப்படுத்துற வேலையும் எனக்கு. பொதுவுல வணக்கத்தையும் வரவேற்பையும்  சொல்லிட்டு ,  

“இப்போ இவங்க  இந்த நாடகத்தை ஆரம்பிச்சு வைப்பாங்க”ன்னு வேர்க்க விறுவிறுக்கச் சொல்லிட்டு சைடு சீனுக்குள்ளே மறைஞ்சுக்கிட்டு வழிஞ்ச வேர்வையைத் தொடைச்சுக்கிட்டேன்.   மறுநாள் சீர் எடுக்கிற மாமன்களை வரவேற்றுப் போட வச்சிருந்த மாலைகளை அவர்களுக்குப் போட்டாரு தேவைகாரர். இதுல ்ஒரு கால்மணி நேரம் ஓடிச்சு. 
 தொடங்கி வச்ச யாராவது பேசி இன்னம் கொஞ்சம் நேரத்தை இழுக்க மாட்டாங்களா,  அந்த நேரத்துக்குள்ளயாவது  என் சித்தப்பா வந்து புல்புல்தாராவை பொறுப்பேத்துக்க மாட்டாரா? ன்னு என்  மனசுக்குள்ளே ஏற்பட்ட  எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிட்டு எல்லாரும் எதுவும் பேசாம இறங்கிட்டாங்க.

               அவங்களை முன்வரிசை பக்கத்துல நாற்காலி போட்டு உட்கார வச்சுட்டாரு ரெங்கன் மாமா.  சின்னப்பசங்க நாடகத்துக்கு இவ்வளவு கூட்டமா? இத்தனை பெரிய மனுசங்க தலைமையா?  படைச்சவளே நீதான் எனக்குத் தைரியத்தைக் கொடுக்கணுமுன்னு வேண்டிக்கிட்டு,  நடிகர் அறிமுகப் பட்டியல், நாடகச் சுவடி ( ப்ராம்ட்) இதுகளோட  பக்கத்திரை மறைவில உட்கார்ந்து புல்புல்தாராவில டைட்டில் மியூசிக்ங்கிற பேர்ல வேகமாய்க் கம்பிகளிலும் பொத்தான் களிலும் என் விரல்கள் விளையாடின. ”கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்” பாடலிசைதான் அது.
              
                 அடுத்து நான் விசிலடிக்க, மேடை விளக்கை மைக்செட் காரர் அணைக்க, நான் நடிகரோட பாத்திரத்தைச் சொல்லி நடிகர் பெயரைச் சொல்ல, இசைப் பின்னணியில் நடிகர் மேடைக்குவர, ஆர்க் லைட் ஆறுமுகம் மேடையில் நிற்பவர் மீது அந்த வண்ண ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்பது திட்டமிடப்பட்டிருந்தது.

              அதன்படி நான் முதல் விசில் ( ஊதல்) அடித்ததும் மேடை விளக்கோடு சேர்ந்து பந்தல்ல போட்டிருந்த தொடர் விளக்கு ( சீரியல் செட் ) குழல் விளக்கு ( ட்யுப்லைட்) வீட்டு விளக்குகள் எல்லாம் சேர்ந்து மூச்சை நிறுத்திக் கொண்டன்.
” எவன்டா அவன் லைட்டையெல்லாம் ஆப் பண்ணுனவன்?  பொண்டுக புள்ளைக ஒக்காந்திருக்கது தெரியலே?“ இருட்டுக்குள்ளிருந்து ஒரு பெரிய மனுசனோட அதட்டல்.
“டேய் பந்தல் லைட்டைப் போடுடா. மேடை லைட்டை மட்டும் ஆப் பண்ணு” ன்னு நா கத்த, “ எல்லாம் ஒரே கனெக்சன்ல இருந்திருக்கு”ன்னு ஆர்க் லைட் ஆறுமுகம் சொல்ல,  வாண்டுகளின்  சீட்டியொலி, சிறுசுகளின் சிரிப்புகளைத் தொடர்ந்து எல்லா விளக்குகளையும் எரிய விட்டார் மைக்செட்காரர் முபாரக். மேடைக்குத் தனி லைன் மாத்திக் கொடுக்கப்பட்டு, ஒரு வழியா நடிகர்கள் அறிமுகம் முடிஞ்சது.

             இந்த களேபரத்துல முதல் காட்சியிலேயே மிராசுதாரா நடிச்சவரு வசனத்தை மறந்துட்டு மேடையில முழிச்சிக்கிட்டு நிக்க. நா அப்பப்ப அவருக்கு எடுத்துக்கொடுத்துச் சமாளிக்க வேண்டியதாயிற்று.

             இதுல வில்லனா நடிச்சவன்  ஒரு காட்சியில  கதாநாயகனைக் கொல்லப் போறேன்னு சீரியசா வசனம் பேசிச் சிரிச்சதுல அவனுக்கு ஒட்டியிருந்த ஆட்டுவால் மீசை பிச்சுக்கிட்டு கீழே விழுந்துடுச்சு. சீரியசான காட்சி காமெடியாக கூட்டத்துல ஒரே சிரிப்பு. 

            விழுந்த மீசையை எடுத்து ஒட்டுறதுக்காக  லைட்டை ஆப் பண்ணி, சீனை மூடச் சொல்லி் நா விசிலடிக்க, சீன் ஆபரேட்டரா இருந்த அடைக்கலம்  வேகமா இழுவைக் கயித்தை இழுக்க, கயிறு பந்தல் கம்புல சிக்கிக்கிட்டு வரமாட்டேன்னு வம்பு பண்ண, “ அட இழுடா, இழுடா” ன்னு நா போட்ட அதட்டல்ல வேகமா  அவன் கயிற்றைச் சுண்ட,  சீன் ஆளை விடுங்கடான்னு அறுந்து கீழே விழுந்துடுச்சு. 

                அதைச் சரிசெய்ய முடியாம அவன் திண்டாட, இருட்டுக்குள்ளே விழுந்த மீசை யாரு காலோடவோ ஒட்டிக்கிட்டுப் போக. அதைக் கண்டுபிடிக்க முடியாம வில்லனை மேக்கப் குடிசைக்குள்ளே இழுத்துக்கிட்டுப் போயி அவசரஅவசரமா அடுப்புக்கரியைக் குழைச்சு மீசையை வரைஞ்சு  மேடைக்குள்ளே தள்ளி விட்டேன். 

              சீர் செய்ய முடியாத ட்ராப் சீனை அத்தோட அதன் ஆயுளை முடிச்சு ஓரங்கட்டிட்டு, லைட்டை ஆன்  பண்ணி விட்ட இடத்துலேயிருந்து வில்லனை வசனம் பேச வச்சா, “ டேய் என்னடா வில்லனுக்கு மீசை மாறிப்போச்சு” ன்னு முன்னால இருந்து ஒரு கமெண்ட். “டேய் இருட்டுல கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் நடந்த சண்டையில கதாநாயகன் வில்லனோட மீசையைப் பிச்சுட்டான்டா” ன்னு அதுக்கு பதில் குரல். 

             லைட் ஆன் ஆப்லே மிச்ச நாடகத்தை கலகலன்னு  ஓட்டி முடிச்சப்ப கெடைச்ச கைத்தட்டல் அடங்க அஞ்சு நிமிசமாச்சு.   நேரத்தைப் பாத்தா மணி பத்தரை. 

            அத்தனை தடைகளுக்குப் பிறகும் கூட்டம் கலையாம இருந்தது எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு (  பந்தி நடக்காததும் படுக்க இடமில்லாமலுமுன்னு அப்பறம்தான் தெரிஞ்சுச்சு)  

              நாடகம் முடிஞ்சதும் எங்கம்மா  ஓடிவந்து நடிச்ச எல்லாரையும் மேடையில நிக்கவச்சு சூடம் கொளுத்தித் திருட்டி சுத்தி ரோட்டுல போட்டாங்க..

        எல்லாருக்கும் மாத்து விரிச்சு இலையைப் போட்டு பந்தி பரிமாறச் சொல்லிட்டு தேவைகார ரெங்கன் மாமா எங்கக்கிட்ட வந்து.

 “ ரொம்பப் பிரமாதமாப் பண்ணிட்டீங்கடா” ன்னு சொன்னதோட கையோட கொண்டு வந்திருந்த வரக்காப்பியை ஆளுக்கு ஒரு குவளை அவரு கையால  ஊத்தியும் குடுத்தாரு.

              “அப்படியே மாப்ளே நம்ப பசங்களை வச்சு, இந்த கலர் பேப்பர், குறுத்து, பாவட்டா எல்லாத்தையும்  வெட்டி ,சணல்லே ஒட்டி பந்தலைச் சுத்தியும், குறுக்கு மறுக்காவும் கட்டி  அலங்காரம்  பண்ணிட்டுப் போய் படுங்க”ன்னாரு.  

             இப்படி ஒரு வாய்ப்பைத் தந்தவருக்கு அதைக் கூட செய்யாம விடுவோமா.  வேர்த்து அழிஞ்சது போக மீதியிருந்த பவுடரைத் தேங்காய் எண்ணையத் தடவித்  தொடச்சு முகத்தைக் கழுவிட்டு  பந்தல் அலங்காரத்துல இறங்கினோம். 

         சாப்பிட்டு முடிச்ச சொந்தங்களுக்கு அன்னக்கி  எங்க நாடகம்தான் மென்னு துப்ப வெத்தலை பாக்கா ஆகிஇருந்துச்சு

ஆறே முக்கால் ரூபாயக் கையில வச்சிக்கிட்டு, ஒரு நாடகத்தை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கப் போறோமுன்னு கலக்கத்தோட இருந்த  எங்களுக்கு கலகலப்பாய்க் கெடைச்ச பாராட்டுகள்தான் எங்கள் கலை மேடையின் அடுத்த படிக்கட்டாய் அமைந்தது.

                                                                    --- தொடர்ந்து வரும் 






Tuesday, March 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்-3


சோதனை மேல் சோதனை.

            தானே சவரம் பண்ணிக்கிறேன்னு கன்னத்துல பிளேடு கீறலோட வந்த கதாநாயகனைத் திட்டிட்டு, கீறல்ல கொஞ்சம் திக்கா பவுடரை வ்ச்சு அமுக்கி மேக்கப் பை முடிச்ச சமயத்துல  தேவைகாரர் கூப்புடுறாரேன்னு பதறிக்கிட்டு ஒப்பனை நடந்த குடிசையை விட்டு வெளியே வந்து பாத்தா...

           வீட்டு வாசல்ல போட்டிருந்த  40க்கு 20 அளவுள்ள பந்தல் நிரம்பக் கூட்டம். பாயை. துண்டை விரிச்சுப் போட்டு இடம் புடிச்சு ஒக்காந்திருந்த  மக்களைப் பாத்த எனக்கு ஒரே மலைப்பு.
                 
                இத்தனைக்கும் ஒரு சின்ன நோட்டிசுகூட அடிச்சு விளம்பரப் படுத்தலே. காது குத்துப் பத்திரிகை வைக்கப்போன எடத்துல எல்லாம்  எங்க மன்றத்துப் பசங்க, மொத நாள் ராத்திரி நாடகம் ன்னு விசுறுன கொசுறு அழைப்போட எபக்ட்,  மறுநாள் காலையில வரவேண்டிய வெளியூரு சொந்தக்காரங்கல்லாம் குழந்தை குட்டிங்களோட  முதல்நாள் சாயங்காலமே வந்திருக்காங்க.

          மெதுவா கூட்டத்தை விலக்கிட்டு கூப்பிட்டு அனுப்புன தேவைகார ரெங்கன் மாமாவைத் தேடிப் போனேன். சமையல்காரர்கிட்ட எதையோ சீரியசா சொல்லிக்கிட்டிருந்தாரு.
” என்ன மாமா கூப்பிட்டீங்களான்னேன்” 
 ” யாரு மாப்ளே வெளியூருலைல்லாம் நாடகம்ன்னு சொன்னது?  அட நெருங்குன  சொந்தக்காரங்கதானே மொதநா ராத்திரி வருவாகன்னு  ரெண்டு பக்கா அரிசி வடிச்சு ஒரு சாம்பாரு, ஒரு கூட்டுன்னு
 ( முட்டைக்கோசுதான்) சமைக்கச் சொல்லியிருந்தேன்.  பாத்தா  இன்னக்கே எல்லாச் சொந்தங்காரனும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்கே. வந்தவுகளுக்குச் சோறுபோடலைன்ன கொறை சொல்லுவானுக. அதான்  இன்னம் ரெண்டு பக்கா போட்டு வடிக்கச் சொல்லிக்கிட்டிருக்கேன்” ன்னு வேதனையும் சிரிப்பும் கலந்த குரல்ல சொன்னாரு.

“ நாங்க யாருக்கிட்டயும் சொல்லலே மாமா. ஒங்க பையன் இதுக் சொல்லியிருப்பான் போலிருக்கு” ன்னு  அவரோட செல்ல மகன் மேல பழியப் போட்டுச் சமாளிச்சேன்.

      “சரி சரி. சமைக்கக் கொஞ்சம் லேட்டாகும்  சீக்கிரமா நாடகத்தை ஆரம்பி.. நாடகம் முடிஞ்சதுக்கப்பறம் பந்தி போடலாம்” ன்னாரு. 

              ஏழு மணிக்கேவா.. இன்னம்  கொஞ்சம் மேக்கப் பாக்கி இருக்கு மாமா” ன்னேன். ” அரிதாரம் போட்டவனுகளை வந்து நடிக்கச் சொல்லுப்பா“
          
                      “அப்படி இல்ல மாமா.. எல்லாருக்கும் மேக்கப் போட்டு  ஒவ்வொருத்தரையும் மேடையில அறிமுகப் படுத்தித்தான் நாடகத்தை ஆரம்பிக்க முடியும்”ன்னேன்..

 “அது வரைக்கும் ஏதாச்சும்  பபூன் , டான்சு காமிக் இருந்தா அவுகள விடு மொதல்ல .” 
அமெச்சூர் நாடகத்துல பபூன் டான்சா?  பழைய தெருக்கூத்து வாசனை மாறாமப் பேசுன  மாமனுக்கு என்ன சொல்றதுன்னு  சங்கடத்துல நெளிஞ்ச என்னை “ எதையாச்சும் சீக்கிரமாப் பண்ணு மாப்ளே“ ன்னு மிலிட்டரி ஆர்டர் போட்டுட்டு  சமையல் காரரைத்  தொடர்ந்தார். 

                     மன்றத் தலைவர் சுப்பிரமணியன் ஆபத்பாந்தவனா வந்து 
“என் அண்ணன் மக நல்லா பள்ளிக்கூடத்து ஆண்டுவிழாவுல டான்சு ஆடுச்சு. அதை ஆடவிடுவோமா”ன்னான் 

                     “எதையாவது பண்ணுன்னு” மேடையப் பாத்தேன்.
 ஊக்குல பிணைச்ச வேட்டி சீனாத் தொங்குச்சு,   ஆறுமுகம் ஆர்க்லைட்டு செட்டப் பண்ணிக்கிட்டிருந்தான்.  இருக்க ட்யுப் லைட்ல,  மைக்செட் காரர்  கிராமபோன் ரெக்கார்டுல போட்ட “அழகான  பொண்ணுதான்” பாடலுக்கு  அந்தச் சிறுமி   மேடையில ஆட ஆரம்பிச்சுச்சு.
 கூடியிருக்க கூட்டம், தேவைகாரரோட சங்கடம் இதுகளுக்கிடையில  சொதப்பாம எப்படி  நாடகத்தை நடத்தப் போறோங்கிற பயம் என்னைக் கவ்விக்கிடுச்சு.

                  அவசர அவசரமா மேக்கப்பை முடிச்சுட்டு , நடிகர்களுக்கு தைரியத்தையும் வாழ்த்தையும் சொல்லிட்டு. வேகமா என் வீட்டுக்கு ஓடி 

 “ முதன் முதலா மேடையேறுறேன் என்னை வாழ்த்தும்மா”ன்னு அம்மா கால்ல விழுந்தேன். அவங்களோட  ரெண்டு சொட்டுக் கண்ணீர்  என் கழுத்துல விழுந்துச்சு. 

                 அதையே வாழ்த்து மாலையா ஏத்துக்கிட்டு அப்பாவைத் தேடுனேன். அவரு பந்தலுக்குப் போயிட்டாருன்னாங்க.
என் தங்கை பார்வதியை மடியில வச்சிக்கிட்டு முன் வரிசையில உட்கார்ந்திருந்த என் அப்பாவை மேடைக்குப் பின்னால அழைச்சு அவரோட வாழ்த்தையும் வாங்கிக்கிட்டேன்.

                 நடிக்கிற பசங்களை , அறிமுக சீனுக்கு பேரு கூப்பிடுற ஆர்டர்ல மேடைக்கு வரணும்ன்னு அறிவுறுத்தி மேடைக்குப் பின்னால வரிசையா நிப்பாட்டுனேன்.
ஆர்க் லைட்டை வெள்ளோட்டம் பாத்துக்கிட்டிருந்த ஆறுமுகத்தைக் கூப்பிட்டு நா விசிலடிக்கிறப்ப மேடை லைட்டை அணைச்சிட்டு  மேடையில நிக்கிற நடிகனோட முகத்துல மட்டும் ஆர்க்லைட்டை அடிக்கணும் ன்னு டைரக்சன் கொடுத்துட்டு,
திரையை இழுக்க ஏற்பாடு பண்ணியிருந்த அடைக்கலத்துக்கிட்டே
 ” நா விசிலடிச்சு லைட் ஆப் ஆனவுடனே ட்ராப் சீனை இழுக்கணு”முன்னு  உத்தரவும்  போட்டாச்சு. 


                      ஒருபாட்டுக்கு ஆடறேன்னு சொன்ன அந்தப் பாப்பா கொசுறா இன்னொரு பாட்டுக்கும் ஆடி முடிச்சிருச்சு. 

இனி நாடகத்தை ஆரம்பிச்சுடலாமுன்னு இருந்த நேரத்துல கடம் வாசிக்கிற பையன் ஓடிவந்து  எங்காதுக்குள்ளே 

”அண்ணே புல்புல்தாரா வாசிக்கிறேன்னு சொன்ன ஒங்க சித்தப்பா, ஆஸ்பத்திரியில அவசர டூட்டின்னு  புல்புல்தாராவை கொண்டாந்து வச்சுட்டுப் போயிட்டாரு” ன்னான். 
மண்டைக்குள்ளே ஆயிரம் அணுகுண்டு வெடிச்ச அதிர்ச்சி.  

அவரு எப்ப டூட்டி முடிஞ்சு வர்றது? எப்ப நாடகத்தை ஆரம்பிக்கிறது? பந்தல் நிரம்பி வழியுது, தேவைகார மாமா வேறே சீக்கிரம் ஆரம்பிக்கச் சொல்லி அணத்துறாரு.  மியூசிக் இல்லாம எப்படி அறிமுகம் செய்யுறது?  குழம்பிப் போன நா ஒரு முடிவுக்கு வந்தேன்....

                                                                                                     --- இன்னும் வரும்  

Sunday, March 19, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள் - தொடர்ச்சி-3

தேடிவந்த வாய்ப்பும்,ஆடிப்போன நானும்


           தன்னைப் படிக்கவச்சு பெரிய ஆளாக்கணும் ங்கிற எண்ணம் கொண்ட  ஒரு ஏழைத் தாய்,  ஒரு மிராசுக்கிட்ட அடிமையாகி, பட்ட துயரங்களையும் அதன் விளைவாக அவள் நோய்வாய்ப்பட்டு இறந்த செய்தியைத் தனது தாத்தா மூலமாகக் கேள்விப்பட்ட முகிலன் தன் தாயின் விருப்பப்படி, படித்து அரசு அலுவலராகி அந்த மிராசிடம் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்கும் கதையே “தாய்ப்பாசம்” என்னும் எனது முதல் நாடகமாக உருவாகி இருந்தது.   

        நாடகக் கலைமன்றத்துக்கும் “ கலைவாணர் மன்றம்” ன்னு பேரு வச்சாச்சு. நாடகத்துக்கும் “ தாய்ப்பாசம்” ன்னு பேரு வச்சு  ஆறு  மாந்தர்கள் பங்கு பெறத்தக்க உரையாடல்களும் எழுதியாச்சு. 

        அரங்கேற்றம்  நடத்துறதுக்கான இடமும் பொருளும்தான் இன்னமும் அமையல.ஆளுக்கு அரை ரூபா சந்தாக்காசு சேத்துக்கிட்டு கூடுவோமுன்னுட்டுப் போன பசங்க அந்தக் காசைத் தேடிக்கிட்டேதான் இருந்தானுக . எப்பக் கூடப்போறானுகளோ?   தவிப்போடு நான்...

               பேறுவச்ச ஆத்தா சோறுபோடாமலா விடுவா?  

             நம்பி்க்கை தளராம காத்திருந்த எனக்கு  அடுத்த ஒரு வாரத்துல அப்படி ஒரு வாய்ப்பும் வந்தது.

               நாங்க  வசிக்கிற  தெருவுல, எனது மாமா உறவுக்காரர் வீட்டுல அவரு மகனுக்கு  வைகாசி  மாதத்தில காதுகுத்து  நடத்த முடிவு பண்ணியிருந்தாங்க.  இரயில்வே துறையில தச்சுத்தொழில் செய்யுற அவர் வீட்டுல நடக்குற முதல் தேவை அது.  நல்லாத் தடபுடலா நடத்தத்திட்டம் போட்டிருந்தாரு.  காது குத்திக்கப்போற அவரு மகன் எங்க கலைவாணர் மன்ற உறுப்பினராவும் இருந்தான்.

           மெதுவா அவன்கிட்ட “ஏன்டா மெய்யப்பா, ஒன் காதுகுத்து விழாவில நம்ம நாடகத்தைப் போடலாமான்னு ஒங்க அப்பாக்கிட்டக் கேட்டுப்பாரேன்? ” ஒரு நப்பாசையில கேட்டு வச்சேன்.

              முதல்ல மறுத்த ரெங்கன் மாமா தன் மகனோட பிடிவாதத்தால ரெண்டு நாள் கழிச்சு என்னைக் கூப்பிட்டாரு.  பயந்துக்கிட்டே போன எங்கிட்ட  “ இந்தபாருப்பா எம்மவன் ஆசைப்பட்டான்னு ஒத்துக்கிறேன். ஆனா காது குத்துக்கு முதல்நாள் ராத்திரி ஒரு அரைமணி நேரத்துக்குள்ள ஒங்க நிகழ்ச்சிய முடிச்சுக்கணும். காசு கீசுன்னு எங்கிட்ட எதையும் கேக்கக் கூடாது” ன்னு ஒரு நிபந்தனையோடு ஒப்புதல் தந்தாரு.

             காசில்லாம நிகழ்ச்சிய எப்படி நடத்துறது? 
             வெறுங்கையில முழம் போட முடியுமா?

             இருந்தாலும்  பாதுகாப்பான வீட்டு நிகழ்ச்சி- ஊராளுங்க எதிர்ப்பு இருக்காது.  விழாப் பந்தலும், மைக்செட்டும் வீட்டுக்காரங்க செலவுல.   அடிக்கிற் காத்தை வச்சு எப்படியாவது  தூத்திக்க வேண்டியதுதான்னு ஒருபக்கம் சந்தோசம்.

             அவசர அவசரமா மன்றம் கூடுச்சு. ஓசியில கெடச்ச வாய்ப்பை நழுவ விடக்கூடாதுன்னு நா சொல்ல.. 

மேக்கப், சீன், மியுசிக் இல்லாம எப்படி நாடகம்  நல்லா இருக்கும்?  பக்கத்து ஊர்ல நடந்த அமெச்சூர் நாடகங்களைப்பாத்த நாடகப் பிரியனான காளிமுத்து ங்கிற உறுப்பினரோட கேள்விகள். 

நியாயமான கேள்விகள் தான். 
இருந்தாலும்  எப்படியாவது  நடத்தியே ஆகணுமுங்கிற முடிவுல எவ்வளவு சிக்கனமா முடியுமோ அவ்வளவு சிக்கனமாச் செய்வோம்.ன்னு ஒரு வாக்குறுதியைச் சொல்லிச் சமாளிச்சேன்.

             நடிக்கிறதுக்கு ஆறுபேரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கான பாடத்தையும் எழுதிக்கொடுத்து ஒரு பத்துநாள் இரவு பகல்ன்னு நேரம் கெடைக்கிறப்பல்லாம் ஒத்திகை நடந்துச்சு.

           மேக்கப்மேனைக் கூப்பிட்டா  குறைச்சலா வச்சாலும் பத்து ரூபா கேப்பாரே. அதனால நானே மேக்கப் மேனா அவதாரம் எடுக்க வேண்டியதாச்சு. 

கால் ரூபா ரெமி பவுடர்  வாங்கி , அரையணா செந்தூரப்பொடியை அதோட  கலந்தா ரோஸ் பவுடர்  ஆச்சு. தனிச் செந்தூரத்தைக் குழைச்சு உதட்டுல தடவுனா லிப்ஸ்டிக். ஆட்டுவால் மயிர் மிராசுக்கு மீசை.. மத்தவனுக்குக் கரித் துண்டால மீசை வரைஞ்சுக்கலாம். சாக்பீஸ் பொடியை குழைச்சு முடியில தடவி  நரைச்ச முடியாக்கிடலாம். அப்பறம் என்ன? மேக்கப் ஓவர்.

                  மியூசிக் என்ன செய்யுறது?. ஒரு ஆர்மோனியம் தபேலா வச்சாக்கூட  அன்னக்கி நெலையில ஆளுக்குப் பத்து ரூபா கொடுக்கணுமே. அதுக்கு எங்கே போறது?

             எங்க ஆறுமுகம் சித்தப்பு ஒரு புல்புல்தாராங்குற கம்பி வாத்தியத்தை வச்சு ஏதாவது அபசுரமா வாசிச்சுக்கிட்டிருப்பாரு. அவரைப் போய்க் கேட்டப்ப ”அட போங்கடா,  பொழப்பத்த பசங்களா ,நானே அரைகொறை, நானாவது நாடகத்துக்கு வாசிக்கிறதாவது?” ன்னு ஒதுங்கினாரு.  தொடர்ந்து நாலஞ்சுபேராச் சேந்து போய் நச்சரிச்சதுல சரின்னு ஒத்துக்கிட்டாரு. 

             தாளத்துக்கு?  காளிமுத்து நான் கடம் வாசிக்கிறேன்னான். ( கடம் ன்னா வெறும் தண்ணிப் பானைதான்)  இடையிடையே தியாகராசன்ங்கிறவன் சினிமாப் பாட்டு பாடிக்கிறேன்னான். இசையமைப்பு  முடிஞ்சது.

            மேடையில்லாம தரையில நின்னா நடிக்கிறது?  மிராசுதாரா நடிக்கிறவனோட ஆசை மேடையேறனுமுன்னு. மெதுவா தேவைக்கார ரெங்கன் மாமாக்கிட்ட “தரையில ஒக்கார வச்சா காது குத்துறது?” ன்னு ஒரு செண்டிமென்டைப் போட அவரும் ஒரு நாலஞ்சு பெஞ்சைப் போட ஏற்பாடு பண்ணிட்டாரு.

           இப்ப இன்னொரு பிரச்சனை உருவாச்சு. பெஞ்சைப்போட்டதும்  மட்டப் பந்தல் தலையில இடிக்கறமாதிரி ஆயிடுச்சு. ஒடனே கொட்டகைக்காரர்கிட்ட சொல்லி அந்தப் பகுதி பந்தலை மட்டும் ஒன்றரை அடி ஒசத்திப் போடச் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டோம்.

          ஒத்த மைக்ல ஓடியாந்து ஓடியாந்தா பேசி நடிக்க முடியும்? தலைவர் சுப்பிரமணியனோட கேள்வி. விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்த  மைக்செட் ( முபாரக் சவுண்ட் சர்வீஸ்) காரரைக் கெஞ்சி இன்னொரு மைக் கேட்டோம். நல்ல மனுசன் ஸ்யுர் மைக் ( அப்ப அது மண்டை மைக் ) கொண்டாந்து வச்சிடுறேன்னாரு.

           வெறும் ட்யுப்லைட்டை வச்சா நாடகம் போடுறது? காமெடி மாரிமுத்து சீரியசாக் கேட்டான். கறிச்சாப்பாட்டுக்காக மைக்செட் ஓட்ட வந்த ஆறுமுகம் அதுக்கும் ஏற்பாடு பண்ணுனான்.

           ஒரு சாக்பீஸ் மரப்பெட்டிக்குள்ள 100 வாட் குண்டு பல்பை பொருத்தி, ஒருஅடிவிட்டமுள்ள வட்ட அட்டையில் 4 வட்ட ஓட்டைகளைப் போட்டு, அதுல புகையிலப் பொட்டல கலர் சலபன் தாள்களை ஒட்டி, சாக்பீஸ் பெட்டியின் ஒரு மூலையில  ஒரு ஆணியை அடிச்சு, அதுல அந்தக் கலர் வட்டத்தட்டைச் சுழற்றி  அவசர ஆர்க் லைட் மாதிரி தயார் பண்ணிட்டான்.

           எல்லாம் சரி. சீன் ( திரைச்சீலை) க்கு என்ன செய்யறது? 
நடிக்கிறவன் எல்லாம் அவனவன் அப்பாக்களோட வேட்டிகளைக் கொண்டாரச் சொல்லி, அம்மாக்கள்ட்ட கெஞ்சி வாங்குன ஊக்குகளால வேட்டிகளை இணைச்சு முன்திரை( ட்ராப் ) தயார் பண்ணியாச்சு.

          காதுகுத்துக்கு முதல் நாள் பகல், நல்லா ஒத்திகை பாத்துட்டு   சாயுங்காலமா எல்லா நடிக்கிற பசங்களையும் சவரம் பண்ணிட்டு , சரியா அஞ்சு மணிக்கு பந்தலுக்குப் பின்னால இருந்த ஒரு குடிசைக்கு ஒப்பனை செய்ய வரச்சொல்லியிருந்தேன்.( சில பேருக்கு  முடி அரும்புற பருவம்தான் ஆனாலும் மழிச்சாத்தான் குழைச்ச பவுடர் சரியா ஒட்டும் )

         அதுல கதாநாயகனா நடிக்கிறவன ஏழு மணியாகியும் ஆளையேக் காணோம். என்னடான்னு பாத்தா அவனே ஷேவ் பண்றேன்னு பிளேடால கன்னத்தில கிழிச்சுக்கிட்டு வந்து நின்னான்.  

         அவனைத்திட்டிட்டு பதட்டத்தோட ஒப்பனை செஞ்சிக்கிட்டிருந்த என்னை ஒரு ஆள் வந்து 
“ஒன்னை தேவைகாரர் கூப்புடுறார்” ன்னான். ஏன்டான்னே. அங்கே வந்து பாரு ன்னுட்டு ஓடிட்டான்.  ஒப்பனை செஞ்சிக்கிட்டிருந்த குடிசையை விட்டு வெளியே வந்து பாத்தா....

                                                                                  -- இன்னும் வரும்.

Thursday, March 16, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள்--தொடர்ச்சி-2

கேள்விகளால் உருவான அடித்தளம்.

        தொடர்ந்து  அந்த ஊரில் நடந்து வந்த காமன் எரிந்தகட்சி எரியாத கட்சி இலாவணி நிகழ்ச்சிக்கு மாற்றாக ஏதாவது சமூகக் கருத்துள்ள  மேடைநாடகங்களைப் போடலாமே என  எனக்குள் எழுந்த எண்ணங்களை செயல்படுத்த,  ஒருநாள் என் வயதொத்த விடலைகளோடு  ஊருக்கு வெளியே உள்ள குண்டாற்றங்கரை தென்னந்தோப்பில்  கூடியது எங்கள் இளைஞர் படை ( ஆறுபேர்கள்தான் )

அவர்களிடம் எனது எண்ணத்தைச் சொல்லி,
“நாமே ஏன் ஒரு நாடக்குழுவை உருவாக்கக் கூடாது?” ங்கிற 
கேள்வியை  நா முன் வச்சேன். 
சரின்னு ஒத்துக்குவானுகன்னு நெனச்ச என்னை,  அந்த அஞ்சுபேருக்கிட்டேருந்து அடுக்கடுக்கா  வந்த  கேள்விகள் 
ரொம்பவே திணற வச்சிடுச்சு

ஊரை எதுத்துக்கிட்டு  ஒரு நிகழ்ச்சிய நம்மால நடத்த முடியுமா?
அப்படியே  ஒரு கலைக்குழு வை ஆரம்பிச்சா அதுல என்னென்ன நிகழ்ச்சி வைக்கிறது?
 பாட்டுக் கச்சேரி வைக்கலாமா?
ரெகார்டு டான்சு நடத்துனா மக்கள் விரும்புவாங்களே
நாடகம் நடத்துறதுன்ன யாரு கதை எழுதுறது?
 யாரு டைரக்ட் பண்ணுறது? 
நடிகைக்கு என்ன பண்றது?
நாடகத்துல பாட்டு டூயட்  உண்டா?
நாடகத்துல நடிக்க முதல்ல நம்ம வீட்டுல அப்பா அம்மா ஒத்துக்குவாங்களா?
நாடக ஒத்திகையை எங்கே பாக்குறது?
அந்த கலைக் குழுவுக்கு என்ன பெயர் வைக்கிறது?
தலைவர், செயலாளர், பொருளாளர் யார்?யார்?
ஒரு நாடகத்தை நடத்தற  செலவுக்கு  பணத்துக்கு என்ன செய்யுறது?
அப்படி ஒரு நாடகத்தைத் தயாரிச்சு ஊருக்குள்ள எந்த எடத்துல நடத்துறது?

இப்படி அடுக்கடுக்கா கௌம்புன  கேள்விகளால முதல்ல  அதிர்ந்து போனாலும், தொடங்கும்போதே முடங்கிப் போகக்கூடாது   
எடுத்த காரியத்தை எப்படியாவது நடத்தியே தீருவதுன்னு ஒரு அசட்டுத் துணிசல் எனக்குள் உருவாக ஆரம்பிச்சிடுச்சு.

முதல்ல  ஒரு அரை மணி நேரத்துல நடத்துற மாதிரி சின்னதா ஒரு நாடகத்தை நடத்துறது. அதுக்கு கதை வசனம் டைரக்சன் பொறுப்பை நானே ஏத்துக்கிறது. பெண்பாத்திரம் இல்லாத , காதல் டூயட் இல்லாத நாடகமா போடுறது ன்னு நா சொன்னதும் 

 “பருப்பு இல்லாத சாம்பாரா ? ”ன்னு ஒரு விடலைக் குரல் கௌம்புச்சு.

 படிப்பு, பெத்தவங்க  சம்மதம், ஊராளுங்க எதிர்ப்பு -இதல்லாம் சமாளிக்க முதல்ல இப்படித்தான் செய்யணுமுன்னு அந்தக் கேள்விநாயகன் வாயை ஒரு வழியா  அடைச்சேன்.

சரி நாடகத்தை எங்கே  போடுறது?   அடுத்த  கேள்வி எழும்புச்சு.

ஊர்ல காமன் ஊனியாச்சு. அதையடுத்து  காமன் எரிப்பு 16 நாள் மண்டகப்படின்னு ஊருக்குள்ள ஏதாச்சும்  நடக்கும். பொது இடத்துல போட்டா ஊருப் பெருசுக விடாது.  அதனால ஊர்ப்பொது இடத்துல போடாம, நா வசிக்கிற மேலத்தெருவில போடுறதுன்னு இடத்தையும்  குறிச்சாச்சு.

எப்போ போடுறது?

ஊர் காமன் பண்டிகையைத் தொடர்ந்து  அடுத்தடுத்து திருவப்பூர், கொன்னையுர்,  இளஞ்சாவுர், நார்த்தாமலை, சமயபுரம் மாரியம்மன் திருவிழாக்கள் வரும். அதுனால வைகாசி ( மே ) மாசத்துல போடலாமுன்னு முடிவாச்சு 
அதுக்கு பல கோயில்களுக்கு வேண்டுதல் வச்சிருக்க  ஒரு தீவிர மாரியம்மன் பக்தனைத் தவிர மத்தவங்க ஒத்துக்கிட்டாங்க. 

சரி குழுவுக்கு என்ன பேர் வைக்கிறது?  

ஆளாளுக்கு ஒரு பேரைச் சொல்ல, அந்தச் சமயத்துல சினிமாவுல சிரிக்கவும் சிந்திக்கவும் வைச்ச கலைவாணர் பெயர்லே “கலைவாணர் மன்றம்“ ன்னு வைக்கலாமுன்னு கலைக்குழுவுக்கு பெயர் சூட்டும் அசந்தாவும் முடிஞ்சது.

இப்போ அந்தக் குழுவுக்கு யார் தலைவர்? செயலாளர்? பொருளாளர்? 

பதவிப் பிரச்சனை பெருசா இன்னக்கி மாதிரி போட்டியில்லாம  தலைவரா என்னையே இருக்கச் சொன்னானுக.

“அவருக்குத்தான் கதை வசனம், டைரக்சன் பொறுப்பு கொடுத்தாச்சுல்ல. நம்மல்ல யாரு மூத்தவரோ அவரு தலைவரா இருக்கட்டுமு”ன்னு  ஒரு சனாதனி சொல்ல அந்த அடிப்படையில   சுப்பிரமணியன் என்பவர் ( 19 வயசுதான். மத்தவங்க 17க்குள்ளதான்)  மன்றத் தலைவரா ஏகமனதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வந்திருந்த மற்ற நாலு பேருக்கும் செயலாளர், பொருளாளர். துணைத்தலைவர், துணைச் செயலாளர் பதவிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. 

பொறுப்புக்கு வந்தவுடனேயே  முக்கியமான பிரச்சனையைப்  பொருளாளர் கிளப்புனார். 

“சின்னமோ, பெருசோ  நாடகம்னு ஒன்னு போடணுமுன்ன  அதுக்குக் கொட்டகை, மைக்செட், மேடை, லைட், மேக்கப், சீன் இதுக்கெல்லாம் காசுக்கு என்ன வழி?”

இந்தக் கேள்விக்கு கொஞ்சநேரம் யாராலயும் வாயைத் தொறக்க முடியல.

கேள்வியின் நாயகனே அதுக்கான வழியையும் சொன்னார்.
உறுப்பினர்கள் ஆளுக்கு முதல்ல ஒரு ரூபா போடுறதுன்னு. 

“கடலமிட்டாய் வாங்கக்கூட காலணாக் காசு கையில் இல்லாத வெட்டிப் பசங்க ஒரு ரூபாய்க்கு எங்கே போவாங்க?”
 1963ல் ஒரு ரூபாய்ங்கிறது  ஒரு சராசரிக் குடும்பத்தோட ஒருவார சோத்துப்பாடு . 

வசதியில்லாத,  படிக்கிற பசங்க என்ன செய்றதுன்னு முழிக்க  முனுமுனுக்க  ஒரு ரூபாயைச் சேத்துக்கிட்டு அடுத்த கூட்டத்துக்கு வாங்கன்னு பொருளாளரோட ஒத்தி வைப்புத் தீர்மானத்தோடு ஆண்டிகள் கூடிக் கட்டிய மடத்துச் சுவர்களாய் அன்றைய கூட்டம்    களைந்தது.

ஆனாலும்  எடுத்த முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் போல என்னுள் எழுந்த கலைக் குரங்கு படைப்புக் கிளைகளில் தீவிரமாய்த்  தாவத் தொடங்கியது. 

ஆம்.  எனது படிப்புக்காகத் தனது மூக்குத்தியையும் இழந்து என்னைப் படிக்க வைத்த என் தாயின் பாசத்தை கதைக்கருவாய்க் கொண்டு எனது  பேனா கவிழத் தொடங்கியது 

  ஒரு மாதத்தில் 40 பக்க நோட்டில்  “தாய்ப்பாசம்” என்னும்  நாடகம் கருக்கொண்டு வளர்ந்தது.  கதை, வசனம் என்ற பெயரில் கிறுக்கப்பட்ட எனது கன்னிப்படைப்பு,  அடுத்த கலைவாணர் மன்றக் கூட்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

--- தொடர்ந்து வரும் 






Monday, March 13, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்.

md;ghd tiyj;js el;GfSf;F tzf;fk;.

         2014Mk; Mz;by; nghd;tpohf; fz;l kzpkd;wj;jpd; epWtduhf ,Ue;J> 12 Mz;Lfs; kufjts;sp mwf;fl;lisiaAk; ,izj;Jf;nfhz;L >gyJiwfisr; Nru;e;j fiy> r%f Mu;tyu;fs; xj;Jiog;NghL  fy;tp tsu;r;rp> fiy ,yf;fpak; %ykhd r%fg;gzpfis Mw;wp te;j kdepiwNthL ,e;jg; gjptpid  tiyg;gjpthf ,Ltjpy; ngUkfpo;tilfpNwd;. 

        kzpkd;wk; vd;w fiy> fy;tpr; Nrit mikg;G fle;J te;j ,e;j 50 Mz;Lfspy;> gy;NtW r%fg; gzpfs; nra;jpUe;jhYk; ehlff;fiyapy; GJf;Nfhl;il efupy; xU Kj;jpiuapidg; gjpj;Js;s mikg;G vd;gJ GJf;Nfhl;ilg; gFjp kf;fs; midtUk; mwpe;j xd;W.

                   ‘jha;g;ghrk;’  njhlq;fp kz;Zf;fQ;rp tiu 72 r%f> fhg;gpa> tuyhw;W  ehlfq;fisg; gilj;J muq;Nfw;wpAs;sij epidf;Fk;NghJ vdf;Nf xU gpukpg;ghfj;jhd; ,Uf;fpwJ.

        r%fk;> tuyhW> fhg;gpak; Mfpa fUg;nghUs;fspy; %d;W kzpNeu r%fNkil ehlfq;fs;> xU kzpNeu cs;suq;f ehlfq;fs;>Kg;gJ epkpl> 15 epkplg; gs;sp Mz;Ltpoh ehlfq;fs;> vdg; gy epuy;fspy; vdJ ehlfq;fs; muq;NfwpAs;sd.

       jpUr;rpuhg;gs;sp thndhyp>;>  fiyf;fhtpup %ykhf ,yq;if Mrpa Nrit> NubNah ntupjh]; >  fpuhkj;J tpohf;fs;>   jpUf;Fws; fofk;> jpyftjpahu; jpUtUs; Mjpdk;. ftpuhrd; ,yf;fpaf; fofk;> ,sq;Nfhtbfs; kd;wk;> GJf;Nfhl;il khtl;l epUthfk; elj;jpa muRtpohf;fs;> khtl;lMjpjpuhtplu; eyj;Jiw;>  r%f eyj;Jiw >rpWNrkpg;G> mwpnthsp ,af;fk;> eghu;L tq;fpr;Nrit> Cu;f;fhty;gil ; vd vdJ ehlfq;fSf;;Fg; gythwhf  fsq;fs; fpilj;jd. 

         72 ehlfq;fs; muq;NfwpAs;sd vdg; ngUikahfr; nrhy;ypf; nfhz;lhYk; me;j ehlfq;fis muq;Nfw;Wk; Ntisfspy; ele;j NrhjidfisAk; NtjidfisAk; mtw;iwf; fle;j rhjidfisANk ,q;F kyUk; epidTfsha; gjptpl tpioe;Js;Nsd;.

tpj;J}d;wpa epiy.


1960 fspy;. ehd; ,ilepiyf; fy;tp gapd;W nfhz;bUe;j fhyk;.
     
        vq;fs; Cupy; ( GJf;Nfhl;il efuhl;rpg; gFjp gpr;rj;jhd;gl;b) 
mg;NghJ 'fhkd; gz;bif' vd;w xU tpoh Mz;L NjhWk; elf;Fk;. 
ujp kd;kjd; Guhzf; fijia xl;b khrpkhj KO epyhf; fhyj;jpy; 
fhkd; Cd;Wthu;fs;. mjidj; njhlu;e;J gjpdhwhk; ehs; 
fhkd; vupf;Fk; epfo;r;rp elf;Fk;. me;j ehspy; 
fhkd; vupe;j fl;rp -vupahj fl;rpd;D  yhtzpf; fr;Nrup elf;Fk;. 
me;jf; fhyj;jpy; mJjhd; vq;f Cupy; ngupa jpUtpoh. 
me;j epfo;r;rpia CNu $b tpba tpba cl;fhu;e;Jk; gLj;Jk; ghu;j;J urpf;Fk;.
     
       njhlu;e;J ele;J te;j me;j yhtzpf; fr;Nrup vd;idg; Nghd;w gs;spf;$lg;; grq;;fSf;Fr; rypg;ig Vw;gLj;j> mLj;j Mz;L Cu;f;$l;lj;jpy; ,isQu;fNshL Nru;e;J> yhtzpf;F khw;whf xU epfo;r;rpapid elj;j 
Ntz;Lnkd;W Fuy; nfhLj;Njhk;. Kjypy; Cu;g; ngupRfs; jaq;fpdhYk; vq;fs; xj;Jioahik ,af;fj;jpw;Fg; gae;J me;j Mz;L VjhtJ 
ehlfk; elj;jyhk; vd KbthdJ.
    
       mg;NghJ gf;fj;J Rw;W tl;lhuf; fpuhkq;fspnyy;yhk; fl;lnghk;K> ts;spjpUkzk;> mupr;re;jpu kahdfhz;lk; gtsf;nfhb Nghd;w ehlfq;fs; ele;J nfhz;bUe;j fhyk;.
     
      vq;fs; er;rupg;Gf;fhf mt;thz;L fhkd; gz;bifapy; ts;spjpUkzk; ehlfKd;D Kbthr;R. mLj;jLj;j Mz;Lfspy; me;j ehlfj;jpy; ts;spf;Fj; jpUkzk; elf;fhkNy gG+d; fhkpf;Fk;  eldkhJk; mbr;r fhkurf; $j;Jk; ghl;Lk; Cu;g;ngz;fis Kfk; Ropf;f tr;rJ.
     
     vq;f ,isQu; rq;fk; ,Jf;F xU KbT fl;lZKd;D neidr;rJ. 
khw;wk; NtZk;d;D nrhy;ypg; ghj;Njhk;.. Cu;f;$l;lj;jpNy fye;Jf;fhk 
js;spg; ghj;Njhk;. lhd;]; fhkpf; Urp fz;l Cu;g;ngURq;f> vq;f KiwaPl;il nfhQ;rKk; rl;il gz;zNy. 

       ts;spjpUkzk; Ffid kze;j Fwj;jp d;Dk; mupr;re;jpu kahd fhz;lk; Kdptupd; rgjk;d;D ehlfg;  ngau;fSk;> elj;Jw ehlff; fk;ngdp Cu;fSe;jhd; khWr;Nr xopa gG+d; fhkpf;fspd; gr;irAk; nfhr;irAkhd Ngr;Rk; ghl;Lkhd njUf;$j;Njhl Nghf;F khwNt ,y;Ny.
     
      me;jf; fhyj;jpNy fhe;jpefu;>>fhkuhrGuk; >Ngh];efu;> rhe;jehjGuk;> Nghd;w GJf;Nfhl;il efu;g; gFjpfspNyAk;> Fopgpiw. ew;rhe;Jgl;b> eKzrKj;jpuk; Nghd;w gf;fj;J Cu;fs;NyAk; mnkr;#u; FOf;fs; rpy r%f ehlfq;fis elj;jpf;fpl;bUe;jhq;f. VNjh xU nra;jpia ,e;j r%f khw;wj;Jf;fhf me;j ehlfq;fs; nrhy;y Kaw;rpj;jd. 

       ehDk; vd; ez;gu;fSk; me;j ehlfq;fisj; Njbj; Njbg; Ngha;g; ghu;j;Njhk;. Vd; ,ijg;Nghy ek;k Cu;NyAk; nra;af; $lhJ?
      
       ,e;jf; Nfs;tp vdf;Fs;Ns xU rpd;d nghwpahf;  fpsk;gp #Nlj;jj; njhlq;Fr;R. ez;gu;fNshlf; fye;J NgRdg;g CuhSq;f xj;J tukhl;lhq;f gbf;fpwij tpl;Ll;L ,e;jg; grq;fSf;F Vd; ,e;j Ntiy?d;D ngj;jtq;f fl;il NghLthq;f. ,g;gbnay;yhk; fUj;Jfs; Kl;bNkhjp Kl;Lf; fl;ilfshNt tpOe;Jr;R..
     
       xUtopah  ehd; 1963 khu;;r;;Ny gjpNdhwhk; tFg;G ( mg;g v];v];.vy;.rp ) Nju;T vOjp Kbr;rTlNd> vk;kdRf;Fs;Ns gJq;fpf; fple;j  fiyf;Fuq;F  kuNkwpf; Fjpahl;lk;Nghl Muk;gpr;rpLr;R.
     
      mQ;rhW ez;gu;fNshl  CUf;F ntspNa XLw Fz;lhw;W re;jpukjp mizf;fl;LNy> xU Qhapw;Wf;fpoik fhiyapy $LNdhk;.

      
      ehk Vd; xU r%f ehlff; FOit Muk;gpf;ff; $lhJ?

vd;Ndhl ,e;j xU Nfs;tpf;Fg; gpd;dhny vj;jid gpur;ridfis cs;slf;fpa  vjpu;f;Nfs;tpfs; nfsk;Gr;R njupAkh? 

                                    ..... njhlu;e;J tUk;.

Wednesday, March 8, 2017

மகளிர் நாள் சிந்தனைகள்


உலக மகளிர் நாள் சிந்தனைகள்.


பெண்ணிற் பெருந்தக்க யாவுள -- திருக்குறள்.

மங்கையராக்ப் பிறப்பதற்கே நல்ல
 மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா- கவிமணி

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பெண்கள் அறிவை வளர்த்தால வையம்
 பேதைமை அற்றிடும் காணீர்
பெண்ணுக்கு விடுதலை நீர்இல்லையென்றால்
பின்னிந்த உலகினில் வாழ்க்கையில்லை. -- பாரதியார்.

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்
வல்லவன் பே ரறிஞன்ஷா வார்த்தை கேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்த வேண்டும்
இல்லையெனில் ஏதுசெயலாம்? பெண்ஆண் என்ற
இரண்டுருளை யால் நடக்கும் இன்பவாழ்க்கை. --பாரதிதாசன்.

பெண்கள் முன்னேற அவர்கள் கைகளில் இருக்கும் கரண்டிகளைப்
பிடுங்கிவிட்டுப் புத்தகங்களைக் கொடுங்கள் - பெரியார்.

என்பவையெல்லாம் மகளிர் பெருமை பேசும் சான்றோர் மொழிகள்.

ஆம் அவர்கள் கண்ட கனவு நனவாகியுள்ளது.
கடந்த நூற்றாண்டி்ல் இருந்ததைவிட இந்த 21ஆம் நூற்றாண்டில் மகளிர் அதிக விழுக்காடு கல்வியில் முன்னேறி இருக்கிறார்கள்.

வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த பெண்கள் இன்று விண்ணிலேறி சாதனை படைக்கிறார்கள்.

அனைத்துத் துறைகளிலும் மகளிர் ஆடவர்க்கு ஈடாகப் பணிபுரிந்து பொருளீட்டுகிறார்கள்.

முன்பைவிட சமூகப் பிரச்சனைகளில் அதிகமாக ஈடுபட்டு, அநீதிகளுக்கு எதிராகப் போராட்டக் களங்களைச் சந்திக்கிறார்கள்.

ஆனாலும் அவர்களை ஏதோ ஒரு சக்தி இன்னும் பின்னுக்கு
இழுத்துக் கொண்டிருப்பதை நடப்பியல் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.
எது அது?

தங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும்  
தடைகளைத் தகர்க்க, பெரும்பாலான் பாமரப் பெண்கள் 
விதியை நொந்து கொள்வதும், ஆன்மீக வேண்டுதல்களில் ஈடுபட்டுக் 
கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வாளாதிருப்பதுமே 
அந்த முட்டுக்கட்டையாக நான் கருதுகிறேன்.

அறிவை விரிவு செய் அகண்டமாக்கு என்ற பாவேந்தர் நெறியையும்,
அறிவு அற்றம் காக்கும் கருவி, அதைச் சென்ற இடத்தால் செலவிடாது 
நன்றின்பால் செலுத்தலே ஆக்கம் தரும் என்ற குறள் நெறியையும்  பின்பற்றி, மூடநம்பிக்கைகளை விட்டு பகுத்தறிவின் வழி சிந்தித்துச் செயல்படும் மகளிரின் விழுக்காடு உயர்ந்தால் பெண்டிர் பேதைமை அகன்று அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் என்பதே இந்த மகளிர் நாள் சிந்தனையாக எனக்குத் தோன்றுகிறது.
மகளிர் மனத்திட்பமே மாற்றங்களின் வினைத்திட்பமாம்.

பாவலர் பொன்.க.

Thursday, March 2, 2017

பழகிய நட்பு எவன் செய்யும்?

நண்பர்கள்.... நண்பர்கள்... நண்பர்கள்.
ஆம் நண்பர்களே இல்லாத மனிதர்கள் இப்புவியில் இல்லை எனலாம்.

அப்படி  நண்பர்கள் யாருமே  இல்லாத மனிதர்கள் நடைப்பிணத்திற்கு ஒப்பாவார்.
அதனால்தான் “ நட்புப் போல் இவ்வுலகில்  செய்தற்கு அரியது ஏதும் இல்லை“ என்கிறது தமிழ்மறை.

பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நண்பர்களைப் பெற்றிருப்பர். அந்த நண்பர்களில் சிலர் தொடர்வண்டிப் பயண நட்பினராக இருக்கலாம். சிலர் விளையாட்டுக்கள நண்பர்களாக இருக்கலாம்.  சிலர் பணியிட நண்பர்களாகவும்  சிலர் இலக்கிய வட்ட நண்பர்களாகவும், சிலர் சமூகச் சேவையில் இணைந்தவர்களாகவும், இன்னும் சிலர் அரசியல் நட்பு வட்டத்தினராகவும் இருக்கலாம். 

ஆனால் ஒரு சிலரே குடும்ப நண்பர்களாகத் தொடர்ந்து பலகாலம் இருப்பர்.

நட்புக்குப் பலகாலப்  பழக்கம் தேவை என்பதில்லை. 
அடிக்கடி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுமில்லை. 
 நேரில் பார்த்துப் பழகாமலேயே கோப்பெருஞ்சோழனின் பண்பு நலனறிந்து  அவன் இறந்த பின்னர்  அவனது புதைகுழியருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்த பிசிராந்தையார் போன்ற காலத்தால் அழியா நட்பினரும் இருந்திருக்கின்றனர்.

அதனால்தான்  “நட்பிற் குறுப்புக் கெழுதகைமை“  என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. அவரே எது நட்பு என்னும் வினாவிற்கு  “முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது, மனம் இனிக்கப் பழகுவதே நட்பு“  என விடை பகர்ந்திருக்கிறார்.
எவ்வகையானும் பெற்ற தொடர்பினை முறித்துக் கொள்ளாமல் தொடர்வதே நல்ல நட்பாக இருக்க முடியும்.

நல்ல நட்பு  வளர்பிறைபோல நாளும் வளரும். பண்புடையவர் நட்பு படிக்கப்படிக்கத் தெவிட்டாத நூலின்பம் போலும் என்பது வள்ளுவர் வாய்மொழிகளே.

நாம் சிரிக்கும்போது சிரிப்பவர்கள் மட்டும் நல்ல நட்பினர் அல்லர்.
 நாம் துயருறும்போது நம் கண்ணீரைத் துடைப்பவரே சிறந்த நட்பினர்  ஆவர்.

உடுக்கை இழந்தபோது உடன் விரைந்து செயல்படும் கைகளைப்போல நட்பினரின் செயல் அமைதல் வேண்டும் என்றும்  உரிமையோடு ஒருவர்க்கு நல்லன செய்தலே சிறந்த நட்பு என  நட்பின் சிறப்புகளை திருக்குறளின் பொருட்பாலில் அய்ந்து அதிகாரங்களில் அழகுபடக் கூறியுள்ளார்.
 ஒருவரின் பிறப்பு, இனம், மொழி, பொருளாதாரம் முதலான நிலைகளால் வேறுபடாமல் முடிந்தவரை அவரைத் தாங்கி நிற்பதே நட்பின் உயர்நிலை என்பதும் வள்ளுவமே.

ஆனால் இன்றைய மின்னணு உலக இயக்கத்தில்  நட்பு என்பது வெறும் தொடர்வண்டிப் பயண நட்புகளாகவே மாறிக்கொண்டிருப்பது கண்கூடு.
உறவுபோல நடித்து புறம்பேசும்  முகம்நக நட்பதாகவே பல நட்புகள் காணப்படுகின்றன.
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்“ என இதைத்தான் கூறினரோ?

ஒருவரால் பயன் கிட்டும்வரை அவரைப் புகழ்வதும், அவரின் பயன் அருகிப் போகுங்கால் அவரைப் பிரிவதும் இகழ்வதுமாக நடப்பியலில் நட்பு சிதைவுற்றுப் போயுள்ளது.

பெரிதும் போற்றற்குரிய பண்பாளர்கள். தொண்டாளர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துப் புகழப்படாமல் அவர்களின் மறைவுக்குப் பின்னரே அவர்களின் நண்பர்களால் குடும்ப நிதி அளிக்கப்பட்டும் ,புகழஞ்சலி செலுத்தப்பட்டும், நினைவிடங்கள் உருவாக்கப்பட்டும், அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டும் வரும் நிலைகளை நோக்க
 “பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
 செய்தாங்கு அமையாக் கடை”  என்னும்  குறள் நெறி  பொய்த்துப் போயிற்றோ என எண்ணத்தான் தோன்றுகிறது.

இன்னும் சிலர் பழகிய நண்பர் கெடுவாய்ப்பால் பழிச்சொல்லுக்குள்ளாகும் போதோ, திட்டமிட்டு  அவதூறுகளால் அவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும்போதோ அவரோடு கொண்டிருந்த நட்பினை விலக்கிக் கொள்கின்றனர். அவரைத் தனது நண்பர் இல்லை என்று ஒதுங்கிக் கொள்வதும், அவரோடு பேசுவதையே இழிவென்று அவரைப் புறக்கணிப்பதும் பரவலாகக் காணப்படுகிறது. 

இன்னும் சிலர் அதுவரை அவர்மீது கொண்டிருந்த நல்லெண்ணங்களுக்கு மாறான செயல்பாடுகளை மேற்கொள்வதும், பின்னாளில் அவர்மீதான அவதூறு பொய்யென்றாகும்போது அவரைத் தேடி நட்புக் கொள்ள முயல்வதும்  இன்றைய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையே நினைவு படுத்துகிறது.

ஆராய்ந்து நட்பு கொள்ளுதலும், நட்பு கொண்டபின்னர் அவரை இகழாது   நல்லது கெட்டது அனைத்திலும் அவரைப் பிரியாது துணை நிற்றலுமே நல்ல நட்பினர்க்கான அடையாளங்களாகும்.

எனவே தாமரை இலைத் தண்ணீராக இல்லாது, அக்குளத்து  நீரற்ற காலததும் அகலாதிருக்கும் கொட்டியும் தாமரைக் கிழங்குகளுமாய் நட்பினைத் ்தொடர்வோம். அதுவே தமிழர் பண்பாடு.