Wednesday, February 18, 2015

காசநோய் பாதிப்பாளர்களுக்கு சத்துத் தானியங்கள் வழங்கல்

      18.02.2015 அன்று, புதுக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில்  அக்சயா - ரீச் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, புதுக்கோட்டை மாவட்ட காசநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கம், தொடர்ந்து காசநோய் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோய் பாதிப்பாளர்களுக்கு விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்வினை நடத்தியது.

               ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்  திரு அய்யப்பன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காசநோய்த் தடுப்பு இயக்கச் செயலாளர் பாவலர்  பொன்.கருப்பையா கருத்தாளராகப் பங்கேற்று பாதிப்பாளர்கள் நோயினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாரம்பரிய தானிய உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியன பற்றி விளக்கினார்.

           திருத்தியமைக்கப்பட்ட காசநோய்ப் பிரிவின் துணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகரன் அவர்கள்  இடைவிடாது மருந்துகளை எடுத்துக்கொள்வதன் அவசியம், பக்க விளைவுகள் பற்றி உடனுக்குடன் மருத்துவர்களிடம் நோய் பாதிப்பாளர்கள் அறிவித்து அதற்கேற்ற சிகிச்சைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது பற்றியும் கூறினார். 

      நோய் பாதிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வந்திருந்த காசநோய் தொற்றாளர்களுக்கு  சத்தூட்டும் 16 வகை பாரம்பரிய உணவுத் தானியப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இயக்க உறுப்பினர் கந்தசாமி அவர்கள் நன்றி கூறினார். 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சேவைகள் தொடரட்டும்.... வாழ்த்துக்கள் ஐயா...

Post a Comment