Wednesday, January 14, 2015

தைத்திங்கள் முதல் நாளே..

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

தைத்திங்கள்  முதல்நாளே  தமிழருக்குப்  புத்தாண்டு
தமிழ்ப்பண்     பாட்டோடு      மகிழ்ந்துநீ     கொண்டாடு

ஞாலத்தின்  முதல்தொழிலாய்   வேளாண்மை  தனைக்கொண்டு
காலத்தை   அதன்வழியே      வகுத்தானே      நம்தமிழன்
ஆடிப்பட்டம்  தேடிவிதைத்துப்   மார்கழியில்    மகசூல்கண்டு
கூடிக்களிக்கும்   நாளாய்க்   கொண்டானே    தைமுதல்நாளை                                                                                                                                 -- தைத்திங்கள்

சுழல்கின்ற   புவிசெழிக்கச்   சூரியனை   முதன்மை   கொண்டான்
சூரியவீதியி்ல்  தங்கும்   உடுக்கள்     பன்னிரண்டு    கண்டான்
சுறவம்முதல்  சிலைஈறாய்   சுழன்றிடும்   ராசிகள்  பெயரைச் 
சூட்டியேதிங்   களைவகுத்துச்   சுறவத்தைத்  தைமுதல் என்றான்                                                                                                                     -- தைத்திங்கள்

கார்கூதிர்  முன்பனி  பின்பனி  இளவேனில்  முதுவேனிலென
காலநிலைக்  கேற்பபொழுதைப்  பருவங்களாய்ப்  பகுத்து வைத்தான்
வெயில்மழைக்  குளிர்பனி  கடந்து  பின்பனியின்  விடியல்  பொழுதின் 
விளைந்ததை     இயற்கை   மூலவெய்  யோன்முன்  படைத்தானே                                                                                                                    -- தைத்திங்கள்

திங்களைப்  பகுத்திட்ட  திறன்மிகு   தமிழ்ச்  சான்றோர்
திடமுடன்  தமிழாண்டு  தொடங்கிய காலம்  சொன்னார்
தீங்கனிச்    சுவையுற்றாம்  திருக்குறள் மறையைத் தந்த
திருவள்   ளுவராண்டே  தமிழாண்டு  எனக்  கொண்டார்                                                                                                                                          -- தைத்திங்கள்

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment